Home
Contactus Weather
HOME arrow COMMUNITY HEALTH
Community Health

எல்லோருக்கும் சுகவாழ்வு
இந்த திட்டம் நகர்ப்புற மக்கள் கிராமப்புற மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அவைரும் சுகமாக வாழவே இந்த திட்டம் 1.4.1990-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் விபத்து பாதுகாப்பு, ஆரோக்கிய வாழ்வு சேமிப்பு என்ற இரு பிரிவுகளாக செயல்பட ஆரம்பித்தது. புள்ளி விவரங்களின் அடிப்படையில் சுகாதாரத்திற்கான பணவிரயத்தை தடுக்கவும், சேமிப்பு மூலம் ஆபத்து காலங்களில் நோயில் உதவுவதற்கும் தொடர்ந்து கல்வி மற்றும் பயிற்சி மூலம் சமூக சுகாதாரத்தை வளர்க்கவும் இத்திட்டம் உதவியாகின்றது.

திட்டத்தின் நோக்கங்கள்:

1.சமூகம் முழுவதும் சுகாதரம் பற்றிய பற்பல சுகாதாரக்கல்வி அளித்தல்.

2.சமூகத்திற்கு பொது சுகாதாரம் பற்றி கல்வி போதனை. தாய் சேய் நலம் சுற்றுப்புற சூழல் பற்றிய கல்வி, இயற்கை குடும்ப நலம் பற்றிய கல்வி முக்கியமாக சிறு குடும்பத்தின் கடமையை உணர்த்துதல்.
3.கிராம சுகாதார பணியாளர்களுக்கும் நோய் தடுப்பு பயிற்சிää நோய் குணமாக்கும் முறை மற்றும் மருத்துவத்திற்கு அழைத்து செல்லும் முறை போன்ற பயிற்சிகள் மூலம் தங்களின் கிராம மக்களுக்காக பணிபுரிய தூண்டுதல்.

சுகாதாரக் கல்வி:
healthமக்களின் சுகாதராத்தை கருத்தில் கொண்டு அதை பேணி பாதுகாத்தல் முக்கிய கடமையாகும். சமூக பொறுப்பில் தான் சுக வாழ்விற்கு வழி காண முடியும் என்ற அடிப்படையில் சுகாதாரக் கல்வி அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தை மையமாக கொண்டு கிராமங்களில் பணிபுரிய சுகாதார பணியாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் வழியாக கிராம மக்களுக்கு சமூக சுகாதாரம், பொது சுகாதாரம், தாய் சேய் நலம் சுற்றுப்புற சூழ்நிலை, இயற்கை குடும்பநலத்திட்டம் இவை அனைத்தையும் பற்றி மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.

சுகவாழ்வு திட்டத்தை வழி நடத்துவதற்கு 7 அலுவலகப் பணியாளர்களும்ää 5 சுகாதார மேற்பார்வையாளர்களும் 25 சமூக சுகாதாரப் பணியாளர்களும் இப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

சிறப்பு செயல்பாடுகள்:
கிராமங்களிலிருந்து வரும் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளவர்களை healthபுதுவை அரசு பொது மருத்துமனைக்கோää ஜிப்மர் மருத்துமனைக்கோ அழைத்து சென்று இலவச மருத்துவ உதவி செய்து அனுப்பி வைக்கின்றோம். இதுவரை கடந்த 14 ஆண்டுகளில் வருடத்திற்கு 875 நோயாளிகள்  வீதம் 12 நோய்  சம்மந்தமான பிரிவுகளில் மருத்துவம் புரிந்து அனுப்பி வைக்கபடுகின்றார்கள். நமது மறைமாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் பிற மறைமாவட்டத்தில் இருந்து வரும் மக்களுக்கும் உதவி புரிந்து வருகின்றோம். இதுவரை 12372 நபர்களுக்கு மருத்துவ உதவி புரிந்து அனுப்பியுள்ளோம்.

எச்.ஐ.வி. / எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்:
கடந்த சில ஆண்டுகளாக புதுவை பல நோக்கு சமூக சேவா சங்கமும்ää தமிழ்நாடு தன்னார்வ நல குழுமமும் இணைந்து எச்.ஐவி / எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும்ää ஆறுதல்களும் தருவது எப்படி என்ற திட்டம் செயல்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் புதுவை பல நோக்க சமூக சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் அனைத்து சங்கங்களுக்கும் இந்நோய் எப்படி பரவுகிறது? எப்படி தடுப்பது? வந்தபின் எப்படி பராமரிப்பது என்ற தகவல்களை தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது. இதில் 276 கிராமத்தில் உள்ள குழு நிர்வாகிகள் கலந்துக் கொண்டார்கள். இந்த தகவல்களை சுகாதார நிர்வாகிகள் அவரவர் சங்க கூட்டத்தில் இந்நோயை பற்றிய விழிப்புணர்வுகளை கூறும் போது மக்கள் தெளிவடைகின்றார்கள்.

மூலிகையை பற்றிய விழிப்புணர்வு:
புதுவை பலநோக்கு சமூக சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் சங்கங்களில் உள்ள மக்களுக்கு மூலியை பற்றி விழிப்புணர்வு கொடுத்து இதன் மூலம் வீடுகளில் மூலிகை தோட்டங்கள் அமைத்து பயன் அடைந்து வருகின்றார்கள். இந்த பயிற்சி புதுவை வேளாண்துறையின் மூலம் மதகடிப்பட்டில் உள்ள மூலிகை பண்ணையில் நடைபெறுகிறது.

இலவச கண் சிகிச்சை முகாம்:
புதுவை பல நோக்கு சமூக சேவா சங்கமும் பாண்டிச்சேரி விஞ்ஞான கழக மருத்துவமனை மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையுடனும் இணைந்து புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மாதம் இரண்டு முகாம் வீதம் இதுவரை 30 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதில் 3869 மக்கள் கலந்துக்கொண்டு 494 நபர்களுக்கு கண்புரை மற்றும் கண்நோய் சம்மந்தமான மருத்துவம் பார்த்து பயனடைந்துள்ளார்கள்.

இலவச பொது மருத்துவ முகாம்:
புதுவை பலநோக்கு சமூக சேவா சங்கம் பாண்டிச்சேரி விஞ்ஞான கழக மருத்துவமனை மற்றும் புதுவை மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து இலவச மாபெரும் பொது மருத்துவ முகாம் நடத்தினோம். 7983 பேர் பயனடைந்துள்ளார்கள். இதில் 3289 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு நலமுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

இலவச இரத்ததான நிகழ்ச்சிகள்:
புதுவை பலநோக்கு சமூக சேவா சங்கத்தில் இயங்கும் சங்கங்களுக்கு இரத்த தானத்தின் முக்கியத்தை எடுத்துக் கூறி தன்னார்வத்துடன் முன்வந்து இரத்ததானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

மாற்று திறனுடையோர் மறுவாழ்வு பணி:
புதுவை பலநோக்கு சமூக சேவா சங்கத்தில் புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டத்தில் உள்ள உடல் நலம், மன நலம் பாதித்த மக்களை நல்ல நிலையில் கொண்டு வர வேண்டும் என்ற உயர் நோக்கத்துடன் இந்த சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு திட்டம் செயல்பட்டு வருகின்றது.

இதன் நோக்கம்:
உடல் ஊனமுற்ற மக்கள் அடிப்படை உரிமைகள் கிடைக்காமல் தவித்துக்கொண்டு உள்ளார்கள். இந்த மக்களை இனம் கண்டு நம்மை போன்று சமுதாயத்தில் நலமுடன் வாழவும், அவர்களுடைய தேவைகளை அவர்களே பூர்த்தி செய்யவும், அதற்கு வேண்டிய உதவிகளை புரிவதே இதன் நோக்கம், மற்றும் இந்த மக்களை குழுக்களாக உருவாக்கி தேவைகளை பூர்த்தி செய்வது.

இதன் அடிப்படையில் ஊனமுற்ற மக்களுக்கு உதவும் விதத்தில் மருத்துவ முகாம் நடத்த பெற்றது. இதில் 252 நபர்கள் கலந்துக் கொண்டார்கள். இந்த முகாமில் மருத்துவ குழுக்கள் கலந்துக்கொண்டு 184 நபர்களுக்கு ஊனமுற்றோர் சான்றிதழ் வழங்கினார்கள். மாவட்ட ஊனமுற்றோர் அலுவலர் கலந்துகொண்டு 11 நபர்களுக்கு மூன்று சக்கர நாற்காலி மற்றும் மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார்கள்.

தற்போது குழுக்களின் தொடர் கூட்டங்கள் மற்றும் தேவையான அரசு உதவிகளுக்கும் ஏற்பாடுகள் செய்துக்கொண்டுள்ளோம்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே பயிற்சிகள் கொடுத்தால் தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்வார்கள் என்ற எண்ணத்தில் இந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு குழந்தையை வளர்க்கும் விதம், மற்றும் பயிற்சிகள் சொல்லிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

 

 

 

 
     
PMSSS © 2004 all rights reserved